உங்கள் விற்பனையாளர் கணக்கில் நீங்கள் உள்நுழைய விரும்பும் ஒவ்வொரு முறையும் டெக்ஸ்ட் அல்லது குரல் அழைப்பு வழியாக உங்கள் தொலைபேசிக்கு அனுப்பப்படும் குறியீட்டைப் பெறுவதை விட, நீங்கள் உங்கள் அங்கீகரிப்பு குறியீட்டை உருவாக்க ஒரு ஆதண்டிக்கேட்டர் செயலியைப் பயன்படுத்தலாம். ஆதண்டிக்கேட்டர் செயலிகள் வேலை செய்யத் தொலைபேசி சேவை அல்லது இணைய இணைப்பு தேவையில்லை, ஆனால் நீங்கள் தேர்வு செய்யும் எந்தவொரு சாதனம் அல்லது கணினியிலும் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்.
ஒரு ஆதண்டிக்கேட்டர் செயலியைப் பதிவிறக்கம் செய்ய, உங்கள் சாதனத்திற்கான app store -க்குச் செல்லவும் அல்லது இணையத்தில் தேடவும்:
-
நீங்கள் iOS அல்லது ஆண்ட்ராய்டு சாதனத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அந்தந்த app store -இல் இருந்து மைக்ரோசாப்ட் ஆதண்டிக்கேட்டர் அல்லது கூகிள் ஆதண்டிக்கேட்டரைப் பதிவிறக்கம் செய்யலாம். நீங்கள் வேறு ஆதண்டிக்கேட்டர் செயலியைப் பயன்படுத்த விரும்பினால், அது TOTP-OAT (வெளிப்படையான அங்கீகாரத்திற்கான முன்முயற்சியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நேரம் அடிப்படையிலான ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் அல்காரிதம்) ஆதரிக்கிறது என்பதை உறுதிப்படுத்தவும்.
-
நீங்கள் ஒரு Windows கணினி, டேப்லெட் அல்லது சாதனத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், Windows Store-இல் “ஆதண்டிக்கேட்டர் செயலி”-ஐத் தேடவும்.
-
USB செக்யூரிட்டி கீயுடன் வேலை செய்யும் புரோகிராம்களை நீங்கள் நிறுவலாம். மேலும் தகவல்களுக்கு, இரண்டு படி சரிபார்ப்புக்கு ஒரு USB செக்யூரிட்டி கீயைப் பயன்படுத்தவும் என்பதைப் பார்க்கவும்.
-
புரௌஸர் அடிப்படையிலான எக்ஸ்டென்ஷன்கள் அல்லது ஆட்-ஆன்களை இணையத்திலிருந்தும் நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்.
குறிப்பு: ஆதண்டிக்கேட்டர் செயலிகளிடம் உங்கள் Seller Central கடவுச்சொல் அல்லது கணக்கு குறித்த தகவல்களுக்கான அணுகல் இல்லை.
நீங்கள் செயலியில் உங்கள் விற்பனையாளர் கணக்கைச் சேர்ப்பதற்கு இரண்டு முறைகளில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.
ஒரே சாதன பதிவுபெறல்
கேமரா இல்லாத சாதனத்தில் உங்கள் ஆதண்டிக்கேட்டர் செயலியை நிறுவுகிறீர்கள் அல்லது QR குறியீட்டை ஸ்கேன் செய்ய உங்கள் சாதனத்தைப் பயன்படுத்த முடியவில்லை என்றால் (உதாரணத்திற்கு, ஒரு கணினியில்) இந்த முறையைப் பயன்படுத்தவும்.
-
Seller Central -இல் உள்நுழைந்து அமைப்புகள் > உள்நுழைவு அமைப்புகள் -க்கு செல்லவும்.
-
மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் -இன், அருகில் உள்ள திருத்து என்ற பொத்தானைக் கிளிக் செய்து, பின்னர் தொடங்கவும்என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
-
நீங்கள் குறியீடுகளை எவ்வாறு பெறுவீர்கள் என்று தேர்வு செய்யக் கேட்கப்படும் போது ஆதண்டிக்கேட்டர் செயலி -ஐச் செக் செய்யவும்.
-
பார் கோடை ஸ்கேன் செய்ய முடியவில்லை? என்ற லிங்கைக் கிளிக் செய்து, அங்குத் தகவல்களைக் காப்பி செய்யவும்.
-
உங்கள் ஆதண்டிக்கேட்டர் செயலியைத் திறந்து, ஒரு புதிய கணக்கைச் சேர்த்து, நீங்கள் காப்பி செய்த தகவல்களைப் பேஸ்ட் செய்யவும். இது உங்கள் விற்பனையாளர் கணக்குடன் உங்கள் செயலியை இணைக்கிறது.
-
QR குறியீட்டின் கீழ்ச் சேர்க்கை திரையில் நீங்கள் மீண்டும் உள்ளிட வேண்டிய ஓர் தற்போக்கான குறியீட்டை, செயலி தானாக உருவாக்கும். குறியீட்டைச் சரிபார்த்துத் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
-
செயலியானது இப்போது புதிய குறியீடுகளை ஓர் தொடர்ச்சியான அடிப்படையில் வழங்கும்.
இரண்டு சாதன பதிவுபெறல்
உங்கள் ஆதண்டிக்கேட்டர் செயலியை நிறுவிய சாதனத்தில் கேமரா இருந்தால் நீங்கள் இந்த முறையைப் பயன்படுத்தவும்.
-
உங்கள் ஆதண்டிக்கேட்டர் செயலி நிறுவப்பட்டுள்ள சாதனத்திலிருந்து வேறுபட்டுள்ள கணினி அல்லது சாதனத்தைப் பயன்படுத்திச் Seller Central -இல் உள்நுழையவும். அமைப்புகள் > உள்நுழைவு அமைப்புகள் -க்குச் செல்லவும்.
-
மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் -இன், அருகில் உள்ள திருத்து என்ற பொத்தானைக் கிளிக் செய்து, பின்னர் தொடங்கவும்என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
-
நீங்கள் குறியீடுகளை எவ்வாறு பெறுவீர்கள் என்று தேர்வு செய்யக் கேட்கப்படும் போது ஆதண்டிக்கேட்டர் செயலி -ஐச் செக் செய்யவும். திரையில் ஒரு QR குறியீடானது காண்பிக்கப்படும்.
-
உங்களின் வேறு சாதனத்தில் ஆதண்டிக்கேட்டர் செயலியைத் திறந்து ஒரு புதிய கணக்கைச் சேர்க்கவும். சாதனத்தின் கேமரா செயல்படும், மேலும் அதைப் பயன்படுத்தி நீங்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.
-
QR குறியீட்டின் கீழ்ச் சேர்க்கை திரையில் நீங்கள் மீண்டும் உள்ளிட வேண்டிய ஓர் தற்போக்கான குறியீட்டை, செயலி தானாக உருவாக்கும். குறியீட்டைச் சரிபார்த்துத் தொடரவும்என்பதைக் கிளிக் செய்யவும்.
-
செயலியானது இப்போது புதிய குறியீடுகளை ஓர் தொடர்ச்சியான அடிப்படையில் வழங்கும்.
கூடுதல் தகவல்கள்